Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday 7 April 2013

பாரம்பரிய புடவைகள் - traditional sarees


விரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்


தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டுமின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப்பார்கள்.

அதிலும் பெண்கள் சாதாரண சிறு பண்டிகை என்றாலே தவறாமல் நல்ல ஃபேஷனான புடவைகளை வாங்கி அணிய நினைப்பார்கள். அதிலும் ஆண்டின் முதல் நாளான சித்திரை ஒன்றில் வாங்கமாட்டார்களா என்ன? அதுமட்டுமின்றி, பொதுவாக பெண்கள் எப்போதும் வாங்க நினைப்பது பட்டுப்புடவை தான். அதிலும் அந்த புடவையில் விலை மதிப்புள்ள புடவைகளை விட, நல்ல அழகான, தரமான மற்றும் விலை குறைவான புடவைகளையே வாங்க ஆசைப்படுவார்கள்.

அத்தகையவர்களுக்காக நல்ல ஃபேஷனாகவும், உடுத்துவதற்கு இதமாகவும், பார்ப்பதற்கு கிராண்டாகவும் இருக்கும் வகையில், தற்போது மார்க்கெட்டில் பல புடவை கலெக்ஷன்கள் உள்ளன. அதில் காஞ்சி பட்டு, சாமுத்ரிகா பட்டு, டசர் சில்க்ஸ், பரம்பரா பட்டு, வஸ்தரகலா பட்டு மற்றும் பல குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் உங்களுக்காக, மிகவும் சிறப்பானதாகவும் மற்றும் அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் இருக்கும் ஒருசில புடவைகளை பார்வைக்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வாங்கி உடுத்தி, சித்திரை 1-ஐ சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.


டபுள் ஷேடட் சாமுத்ரிகா பட்டு சாமுத்ரிகா பட்டு அதிகமான விலை என்று நினைக்கலாம். ஆனால் அவற்றின் விலை அதிகம் இருந்தாலும், அதன் தரம் நன்றாக இருக்கும். அதிலும் இரண்டு நிறங்களின் நிழல் போன்று தெரியும் டபுள் ஷேடட் பட்டுவில், பச்சை மற்றும் மஞ்சள் கலந்து காணப்படும் இந்த புடவையை உடுத்தினால் சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 45,985 நிறம்: டபுள் ஷேடட் (பச்சை மற்றும் மஞ்சள்)


வானத்து நீலம் மற்றும் ஊதா நிற டிசைனர்
சேலை நீலம் மற்றும் ஊதா கலந்துள்ள டிசைனர் சேலையை, ஏதேனும் விழாக்களின் போது உடுத்தினால், பார்ப்பதற்கு சிம்பிளாகவும், ஆனால் கிராண்டாகவும் இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 12,815 நிறம்: வானத்து நீலம் மற்றும் ஊதா



வெந்தய கலர் காஞ்சி பட்டு
காஞ்சிபுரப் பட்டு புடவையில் உடல் முழுவதும் வெந்தய கலரும், மெரூன் கலர் பார்டர் கொண்ட, இந்த புடவை உடுத்துவதற்கு நன்றாக இருப்பதோடு, விலை குறைவாகவும் உள்ளது. பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ.5,925 நிறம்: வெந்தய கலர் மற்றும் மெரூன் பார்டர்




இன்டிகோ ப்ளூ சாமுத்ரிகா பட்டு
சாமுத்ரிகா பட்டுவில் ஓரளவு விலையில் மற்றும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கு இந்த இன்டிகோ ப்ளு நிற புடவை சரியாக இருக்கும். அதிலும் இந்த புடவைக்கு அவ்வளவாக எந்த அணிகலனும் தேவையில்லை. கழுத்தில் மட்டும் எடுப்பான நெக்லேஸ் போட்டாலே, சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 16,875 நிறம்: இன்டிகோ ப்ளூ




க்ரீம் நிற நெட் டிசைனர் சேலை
புடவைகளில் நெட் டிசைனிலும், அழகான க்ரீம் நிறத்தில், ஆங்காங்கு சிறு கல் வேலைபாடுகளுடன் இருக்கும் இந்த டிசைனர் சேலை பார்த்தால், விலை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் விலை குறைவானது. பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 10,875 நிறம்: க்ரீம்



பிங்க் நிற பனாரஸ் சில்க்
பனாரஸ் சில்க்கில் பிங்க் நிற உடலில், கோல்டன் நிற இலை போட்டு, பச்சை நிற பார்டர் இருக்கும், இந்த புடவை உடுத்தினால் கிராண்டாக தெரியும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 17,255 நிறம்: பிங்க் மற்றும் பச்சை நிற பார்டர்




வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்
பரம்பரா பட்டு பரம்பரா பட்டுவில் இரண்டு பார்டர்கள் கொண்டதில், பார்ப்பதற்கு அழகான காம்பினேஷனில் இருப்பது, வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் நிற பார்டர் கலந்த இந்த புடவை சூப்பராக இருக்கும். மேலும் இதன் முந்தானை அழகான வகையில் நெய்யப்பட்டுள்ளது. இதற்கு காலர் வைத்த ஜாக்கெட் அணிந்தால் அழகாக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 15,675 நிறம்: வெந்தயம் மற்றும் அடர் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்




மயில் நீல பராம்பரா
இந்த மயில் நீல பட்டுப் புடவையில் ஒரு பக்கம் பெரிய பார்டரும், மறுபக்கம் சிறு பார்டரும் மற்றும் மாம்பழ டிசைன் போட்ட முந்தானை உள்ளது. இதற்கு சாதாரணமாக பா கழுத்துள்ள ஜாக்கெட் தைத்து, அதன் இருமுனைகளிலும் ஜன்னல் போன்ற இரண்டு கோடுகளை தைத்து, போட்டால், அருமையாக இருக்கும்.




ஆரஞ்சு மற்றும் வெந்தய நிற பரம்பரா பட்டுப்புடவை
பெண்கள் விரும்பி அணிய நினைக்கும் பட்டுவில் பராம்பரா பட்டு ஒன்று. இந்த பட்டுவில் விலை குறைவாகவும், அழகான கலர் காம்பினேஷனுடன் காணப்படுவது, ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் கலந்த, மாம்பழ டிசைன் போட்ட, இந்த பரம்பரா பட்டு தான். இதற்கு சாதாரணமாக ஜாக்கெட் அணிந்து, நன்கு எடுப்பான அணிகலன்களை அணிந்தால், சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 13,555 நிறம்: ஆரஞ்சு மற்றும் வெந்தய நிறம்




மெரூன் மற்றும் கோல்டன் பார்டர் வஸ்த்ரகலா பட்டு
சற்று ஜொலிக்கும் வகையில் புடவை வாங்க வேண்டுமெனில் அதற்கு வஸ்த்ரகலா பட்டு தான் சரியாக இருக்கும். அதிலும் இந்த மெரூன் மற்றும் கோல்டன் நிற பார்டருடன், ஆங்காங்கு சிறு வேலைபாடுகளுடன் கொண்ட, இந்த புடவையை அணிந்தால், நன்றாக இருக்கும். மேலும் இந்த புடவைக்கு மேட்சாக இருக்கும் அணிகலன்களை அணிய வேண்டும். பிராண்ட்: போத்தீஸ் விலை ரூ. 14,225 நிறம்: மெரூன் மற்றும் கோல்டன் பார்டர்




சர்வ லட்சண பலவண்ண சாமுத்ரிகா பட்டு
சாமுத்ரிகாவிலும் பல்வேறு வண்ணங்கள் கலந்துள்ள பட்டுப் புடவைகள் உள்ளன. அத்தகையவற்றில் இங்குள்ள சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்திருக்கும் சாமுத்ரிகா பட்டு சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 28,055




வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி
பெண்களுக்கு பிங்க் நிறம் என்றாலே மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு வஸ்த்ரகலாவில், கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ள இந்த பிங்க் நிற புடவை சரியானதாக இருக்கும். இது பார்ப்பதற்கு அதிக விலை போல் தெரிந்தாலும், இதன் தரத்தால் நிச்சயம் வாங்கலாம். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 16,085 நிறம்: வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி




ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்
வஸ்த்ரகலா பட்டு இந்த ஊதா நிற எம்பிராய்டரி வஸ்த்ரகலா பட்டுவில், ஆங்காங்கு சிறு மணிகளால் எம்பிராய்டர் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இதற்கு போடும் ஜாக்கெட்டின் கைகளுக்கு, சேலையில் வரும் பார்டரை வைத்து தைத்தால், பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 20,045 நிறம்: ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்




நீலம் கலந்த பச்சை நிற வசுந்தரா பட்டு
பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், அழகான டிசைனிலும் புடவை வாங்க வேண்டுமெனில், அதற்கு வசுந்தரா பட்டு சரியானதாக இருக்கும். அதிலும் இந்த நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர் கொண்ட புட்டு புடவை சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 4,205 நிறம்: நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர்




ராமர் நீல டசர் சில்க்
பார்ப்பதற்கு சிம்பிளா இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், டசர் சில்க் வாங்கலாம். அதிலும் ராமர் நீலம் மற்றும் வெந்தய நிற பார்டருடன் கூடிய புடவை அழகாக இருக்கும். இதன் விலையை சொன்னால் நம்பமுடியாது தான். இருப்பினும், இது தரமுள்ளதாக நீண்ட நாட்கள் உழைக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 6,305 நிறம்: ராமர் நீலம் மற்றும் வெந்தய பார்டர்




மஞ்சள் நிற வசுந்தரா
மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், வசுந்தரா பட்டுவில் உள்ள வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர் கொண்ட புடவையை அணியலாம். அதை அணிந்தால், சற்று கிராண்டாகவும், சிம்பிளாவும் இருக்கும். விலையும் குறைவானது. குறிப்பாக இதற்கு இங்கு குறிப்பிட்டுள்ளது போல், ஜாக்கெட் அணிந்தால், சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 5,775 நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர்




14 Famous Cotton Sarees In India


Cotton saree makes really comfortable clothing for summers. As summer in India is famous for being brutally hot, there are many varieties of Indian cotton sarees to combat the heat. Almost every state in India has its own variety of traditional cotton sarees. Some of these cotton sarees like the Bengali Tant sarees are famous for their fabric quality. Others are famous for the thread work like Zamdani.

The most famous India sarees using cotton is the khadi. Khadi was originally a kind of home-spun cloth that is rough in texture. Mahatma Gandhi started spinning khadi to stop the import of British textiles during the independence struggle. Khadi that was once a symbol of the national freedom movement is a style statement now. Other famous Indian sarees include the Pochampalli cotton sarees and also the Sambalpuri sarees from Odisha.

There are several types of embroidery, handloom styles and patterns that define the various Indian cotton sarees. We have listed some of the best known Indian cotton sarees for you here. As a tribute to Indian handloom weaves, you can certainly stock up these sarees.

Tant: Tant is a Bengali saree that is known by its crisp texture. There are various designs available in a tant sarees. But the beauty of a tant saree is in its starched crispness.

Khadi: Sarees made of the coarse khadi material are a big style statement now. Khadi in white and a slightly brownish colour looks stylish.

Dhakai: Dhakai sarees are originally from Dhaka, Bangladesh. But the amazing embroidery is now very widely replicated in Kolkata as well. You have the normal Dhakai sarees that have plain thread work and the Zamdani Dhakai sarees that have golden thread work.

Lucknowi Chikan: Chikan is special kind of perforated embroidery that comes from Lucknow. The work on these sarees is usually done with contrasting colours of threads.

Sambalpuri Sambalpuri: is the most famous saree from Odisha. This saree has vibrant colours and the main feature of the saree is its pallu. The pallu has intricate embroidery that makes this saree very special.

Kanjeevaram: Kajeevaram sarees come from Kanchipuram in Tamil Nadu. Although the Kanjeevaram silks are more popular, there are a few varieties of cotton sarees as well.

Kotki: Kotki is a Bengali design that is distinguished by its temple borders. This saree comes mostly in muted shades of colours and is great for day wear.

Bomkai: Bomkai is another variety of saree that is woven in the district of Sambalpur in Odisha. Bomkai sarees have a typical pallu of the saree. Apart from that, the entire saree has small dots of embroidery and a slim border.

Pochampally: Pochampally cotton sarees are ikat sarees from Southern India. They are popular for their patterns and colourful designs.

Zamdani: Zamdani is a special kind of embroidery or thread work that is done on cotton sarees. Most often, golden threads are used for Zamdani embroidery. But plain threads can also be used for these weaves.

Pasapalli: Pasapalli is a saree from the Bargarh district in Odisha. Pasapalli sarees are known by their squared patterns, especially in the pallu. This saree is completely hand woven and it takes months to produce one saree.

Chanderi: Chanderi is saree from the central parts of India. This saree is distinct due to its semi-transparent texture. Chanderi cottons are light and have a bright sheen on them.

Supernet: Supernet sarees are a type of semi-transparent sarees that are very popular these days. These sarees are not traditional and therefore do not belong to any particular state.

Kota: Kota is a special cotton saree from Rajasthan. Kota sarees are worn casually and also for occassions like weddings or pujas.

Thanks